பதிவு செய்த நாள்
30 மே2012
23:55
சென்னை: நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும், விவேக்ஸ் நிறுவனம், "டேப்லெட் கம்ப்யூட்டர்' விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மிலாகுரோ நிறுவனம்,7 அங்குலம் கொண்ட, "டேப்லெட் கம்ப்யூட்டர்'களை அறிமுகம் செய்துள்ளது. இவை, விவேக் நிறுவனத்தின் கிளைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்து விவேக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.ஏ.சீனிவாசன் கூறியதாவது:இந்தியாவில், "டேப்லெட் கம்ப்யூட்டர்' பயன்பாடு, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, பல வகை, "டேப்லெட் கம்ப்யூட்டர்'களை விற்பனை செய்து வருகிறோம். அவற்றில், மிலாகுரோ நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.தற்போது, மிலாகுரோ நிறுவனம், 7 அங்குலம் கொண்ட, "டேப்லெட் கம்ப்யூட்டர்'களை அறிமுகப் படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்ட் வி4.0.3 இயக்கத் தொகுப்பில் செயல்படும் இந்த சாதனத்தில், 5 போல்டர்களில், 50 வகையான சாப்ட்வேர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், 4ஜி தொழில்நுட்ப சேவையை பெறும் வசதியும் உள்ளது. இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|