சென்ற ஏப்ரலில்.நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.67,450 கோடியாக உயர்வுசென்ற ஏப்ரலில்.நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.67,450 கோடியாக உயர்வு ... ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை அதிகரிப்பு ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை அதிகரிப்பு ...
நடப்பு ஆண்டின் மே மாதத்தில். முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2012
01:36

புதுடில்லி:பல முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை, சென்ற மே மாதத்தில் சரிவடைந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வெளிமதிப்பில் ஏற்பட்ட சரிவு நிலை போன்றவை வாகன விற்பனை சந்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இதுதவிர, பல்வேறு மாநிலங்களில், வாகனப் பதிவுக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது மற்றும் சில்லரை கடன்களின் அளவு குறைந்தது போன்றவையும் மோட்டார் வாகன விற்பனையில், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே, சென்ற மே மாத வாகன விற்பனை குறைவிற்கு முக்கிய காரணம்.
மாருதி நிறுவனம்:நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சென்ற மே மாதத்தில், 4.99 சதவீதம் சரிவடைந்து, 98 ஆயிரத்து 884 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 73 ஆக அதிகரித்து காணப்பட்டது.
இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு வாகனங்கள் விற்பனை 4.32 சதவீதம் சரிவைக் கண்டு, 93 ஆயிரத்து 519 என்ற எண்ணிக்கையிலிருந்து, 89 ஆயிரத்து 478 ஆக குறைந்துள்ளது. இதே போன்று, இந்நிறுவனத்தின் ஏற்றுமதியும் 10.88 சதவீதம் குறைந்து, 10 ஆயிரத்து 554 லிருந்து, 9,406 ஆக சரிவடைந்துள்ளது. உள்நாட்டில், இந்நிறுவனத்தின் மொத்த பயணிகள் கார் விற்பனை 5.94 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 76 ஆயிரத்து 874 என்ற எண்ணிக்கையிலிருந்து, 72 ஆயிரத்து 309 ஆக சரிவடைந்துள்ளது.
எம்-800, ஏ-ஸ்டார், ஆல்டோ மற்றும் வேகன்ஆர் போன்ற சிறிய வகை கார்களின் விற்பனையும், 29.03 சதவீதம் குறைந்து, 42 ஆயிரத்து 125 லிருந்து, 29 ஆயிரத்து 895 ஆக குறைந்துள்ளது. ஆடி நிறுவனம்:சென்ற மே மாதத்தில், ஆடி நிறுவனம், 450 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட 10 சதவீதம் (408 கார்கள்) அதிகமாகும்.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில், இந்நிறுவனம், 3,281 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 37 சதவீதம் (2,394 கார்கள்) அதிகமாகும்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி:சென்ற மே மாதத்தில், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை 1 லட்சத்து 76 ஆயிரத்து 12 ஆக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1 லட்சத்து 85 ஆயிரத்து 930 ஆக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆக, இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது.
இதே மாதங்களில், இந்நிறுவனத்தின், ஒட்டு மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை, 1 லட்சத்து 81 ஆயிரத்து 891 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1 லட்சத்து 73 ஆயிரத்து 92 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், உள்நாட்டு வாகனங்கள் விற்பனை, 1 லட்சத்து 58 ஆயிரத்து 829 லிருந்து, 1 லட்சத்து 51 ஆயிரத்து 980 ஆக சரிவடைந்துள்ளது.
சென்ற மே மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் ஏற்றுமதி, 22 ஆயிரத்து 817 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 26 ஆயிரத்து 168 ஆக அதிகரித்து காணப்பட்டது.
ஜெனரல் மோட்டார்ஸ்:நடப்பாண்டின் மே மாதத்தில், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, 6,079 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 27.01 சதவீதம் (8,329 வாகனங்கள்) சரிவாகும். இதில், ஸ்பார்க் (4,110), பீட் (71), அவியோ (7), டவேரா (946) ஆகிய கார்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு விற்பனையாகியுள்ளன.
மகிந்திரா நிறுவனம்: சென்ற மே மாதத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, 43 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 34 ஆயிரத்து 323 ஆக குறைந்து காணப்பட்டது. ஆக, இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில்,இந்நிறுவனம், உள்நாட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை, 24 சதவீதம் உயர்ந்து, 32 ஆயிரத்து 159 லிருந்து, 39 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ்:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, சென்ற மே மாதத்தில், 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின், வர்த்தக மற்றும் பயணிகள் கார் விற்பனை 60 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 6 சதவீதம் (56 ஆயிரத்து 571 வாகனங்கள்) அதிகமாகும். இதில், வர்த்தக வாகனங்களின் விற்பனை, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37 ஆயிரத்து 170 என்ற எண்ணிக்கையிலிருந்து, 39 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது.
பயணிகள் கார் விற்பனையும், 6 சதவீதம் உயர்ந்து, 19 ஆயிரத்து 401லிருந்து, 20 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், இலகு ரக வாகனங்கள் விற்பனை, 26 சதவீதம் உயர்ந்து, 21 ஆயிரத்து 638 லிருந்து, 27 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.அதேசமயம், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை, 20 சதவீதம் சரிவடைந்து, 15 ஆயிரத்து 532 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12 ஆயிரத்து 451 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)