மகேந்திரா பவரால் நிறுவனம் உயர் வகை 'இன்வர்ட்டர்கள்' அறிமுகம்மகேந்திரா பவரால் நிறுவனம் உயர் வகை 'இன்வர்ட்டர்கள்' அறிமுகம் ... நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில் உணவு பொருட்களுக்கான மானிய சுமை ரூ.1 லட்சம் கோடியாக உயரும் நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில் உணவு பொருட்களுக்கான மானிய சுமை ரூ.1 லட்சம் ... ...
நாட்டின் காபி ஏற்றுமதி 34,415 டன்னாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2012
01:05

புதுடில்லி:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டின், சென்ற மே மாதத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, 34 ஆயிரத்து 415 டன்னாக குறைந்துள்ளது என, காபி வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிவு:கடந்த ஆண்டு மே மாதத்தில், காபி ஏற்றுமதி, 38 ஆயிரத்து 459 டன் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது. ஆக, இடைப்பட்ட காலத்தில், இதன் ஏற்றுமதி, 11 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில், காபி ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 6 சதவீதம் குறைந்து, 76 ஆயிரத்து 389 டன்னிலிருந்து, 72 ஆயிரத்து 50 டன்னாக குறைந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், காபி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 3 சதவீதம் உயர்ந்து, 1,038 கோடியிலிருந்து, 1,070 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம், டாலர் மதிப்பின் அடிப்படையிலான ஏற்றுமதி, 10 சதவீதம் குறைந்து, 23.32 கோடி டாலரிலிருந்து, 21 கோடி டாலராக குறைந்துள்ளது.நடப்பு காலண்டர் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான, ஐந்து மாத காலத்தில், இதன் ஏற்றுமதி, 1 லட்சத்து 74 ஆயிரத்து 542 டன்னிலிருந்து, 1 லட்சத்து 73 ஆயிரத்து 358 டன்னாக குறைந்துள்ளது.
ரோபஸ்டா வகை காபி இதில், அரபிகா வகை காபி ஏற்றுமதி, 37 ஆயிரத்து 43 டன்னிலிருந்து, 35 ஆயிரத்து 275 டன்னாகவும், ரோபஸ்டா வகை காபி ஏற்றுமதி, 97 ஆயிரத்து 589 டன்னிலிருந்து, 96 ஆயிரத்து 693 டன்னாகவும் குறைந்துள்ளது.நடப்பு காபி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), அக்டோபர் முதல் மே வரையிலான எட்டு மாத காலத்தில், இதன் ஏற்றுமதி, 4 சதவீதம் குறைந்து, 2 லட்சத்து 39 ஆயிரத்து 758 டன்னிலிருந்து, 2 லட்சத்து 30 ஆயிரத்து 883 டன்னாக குறைந்துள்ளது என, காபி வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)