அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.347 கோடி விலக்கல்அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.347 கோடி விலக்கல் ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிப்பால்...உலகளவில் பால் பொருட்கள் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
03:02

மும்பை:உலகளவில் பால் பொருள்கள் உற்பத்தி அதிகரித்து வருவதால், அவற்றின் விலை சரிவடைந்து வருவதாக ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ.,) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி:சர்வதேச அளவில், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எனினும், அது மேலும் உயராமல் நிலையாக காணப்படுகிறது. சென்ற 2011ம் ஆண்டு, உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடியால், சர்வதேச உணவு பொருட்கள் இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில் புதிய இலக்கை எட்டியது.
நடப்பு 2012ம் ஆண்டு, சர்வதேச அளவில் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், சர்வதேச உணவுப் பொருள் இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டை விட, சற்று குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.
உணவு வகைகளில், குறிப்பாக பால் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை குறையத் துவங்கியுள்ளது. அதே சமயம், இறக்குமதிக்கான தேவையும் அதிகரித்துள்ளது.சென்ற 2011ம் ஆண்டின் மத்தியில், சர்வதேச சந்தையில், பால் பொருட்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள நாடுகளில், பால் பொருட்கள் உற்பத்தி உயர்ந்தது.
விலை வீழ்ச்சி:அதே சமயம், வட பகுதிகளிலும், பருவத்தின் தொடக்கத்திலேயே பால் பொருட்களின் உற்பத்தி உயர்ந்தது. இதனால், அவற்றின் விலை, ஏப்ரல் மாதம் முதல் மேலும் குறையத் தொடங்கியது.
பால் பொருட்களின் விலை வீழ்ச்சியால், ஏற்றுமதி அதிகரித்த அதே வேளையில், டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பும் Œரிவடைந்தது.
பால் பொருட்களின் உற்பத்தி, தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், நடப்பு ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் அவற்றின் விலை மேலும் வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது.
நடப்பாண்டில், உலக பால் உற்பத்தி 2.7 சதவீதம் வளர்ச்சி கண்டு 75 கோடி டன்னாக உயரும். இதில், ஆசிய நாடுகளின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
பெரும்பாலான மண்டலங்களில் பால் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டிலும், பால்பொருட்கள் சார்ந்த சர்வதேச வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி காணும். குறிப்பாக, சர்வதேச அளவில் பால் பொருட்கள் இறக்குமதி, 5.27 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லத்தீன் அமெரிக்கா :ஆசியா தொடர்ந்து, பால் பொருட்கள் சந்தையின் முக்கிய மையமாக விளங்குகிறது. இதை தொடர்ந்து, வட ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் உள்ளன.
ஓசியானா மற்றும் தென் அமெரிக்க நாடுகள், பதப்படுத்தப்பட்ட பால் வகைகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. இது, உலகளவிலான மொத்த பால் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இறைச்சி:கால்நடை வளர்ப்பு துறை சர்வதேச அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், நடப்பு 2012ம் ஆண்டில் சர்வதேச இறைச்சி உற்பத்தி, 2 சதவீதம் வளர்ச்சி கண்டு 30.2 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வளரும் நாடுகளில் இறைச்சி உற்பத்தி, இரண்டாவது ஆண்டாக குறையும். இதற்கு, மூலதனச் செலவினம் அதிகரிப்பு, உள்நாட்டில் இறைச்சிக்கான பயன்பாடு குறைந்துள்ளது மற்றும் வளரும் நாடுகளின் கடுமையான போட்டி ஆகியவை காரணமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், வளரும் நாடுகளில், கால்நடை வளர்ப்பு துறை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ஆண்டில், மாமிச இறக்குமதி மேற்கொள்ளும் முக்கிய நாடுகளில், அதன் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த அளவில், சர்வதேச நாடுகளில் மாமிச இறக்குமதியும் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.வளர்ந்த நாடுகளின் அளிப்பு, வரையறைக்கு உட்பட்ட நிலையில், இது, சர்வதேச சந்தையில், குறிப்பாக இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கத் துணை புரியும்.இறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள அமெரிக்கா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதர இறைச்சி ஏற்றுமதி நாடுகளிலும், கால்நடைகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கே உள்ளது. இதனால், நடப்பாண்டின், முதல் காலாண்டில் சர்வதேச அளவில் இறைச்சி விலை புதிய உச்சத்தை தொட்டது.
நடப்பாண்டு, கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக இறைச்சி உற்பத்தி பாதிக்க வாய்ப்புள்ளது.மீன்:மீன் மற்றும் மீன் உணவு வகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் கடல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நடப்பாண்டில், கடல் உணவுப் பொருட்களின் உற்பத்தி உயர்ந்துள்ளதால், ஒட்டுமொத்த அளவில் மீன் உற்பத்தி 2 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்று, ஏற்றுமதி வர்த்தகமும் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் வளர்ச்சி காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)