பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
01:02

புதுடில்லி:கோல் இந்தியா நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 60 சதவீத நிலக்கரியை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.இது குறித்து மத்திய மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோல் இந்தியா, 80 சதவீத நிலக்கரியை மின் நிறுவனங்களுக்கு வழங்க இயலாது என தெரிவித்துள்ளது.
60 சதவீத நிலக்கரியைமட்டுமே தற்போது வழங்க முடியும் என்றும், இது, அடுத்த நான்கு ஆண்டுகளில், 80 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதன்படி, கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு செயல் படத் துவங்கிய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி வழங்கப்படும்.
ஒப்பந்தம்:மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி,கோல் இந்தியா குறைந்தபட்சம்80 சத வீத நிலக்கரியை வழங்க வேண்டும்.ஆனால், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை யில், கோல் இந்தியா உள்ளது. குறைந்தபட்சம் 65 சதவீத நிலக்கரியை மின் நிறுவனங்களுக்கு கோல் இந்தியா வழங்க வேண்டும் என, மத்திய மின் அமைச்சகம்கேட்டுக்கொண்டுள்ளது.
ஒப்பந்தப்படி, குறித்த காலத்தில் நிலக்கரி வழங்காவிட்டால், கோல் இந்தியா நிறுவனத்திற்கு, 0.01 சதவீதம் அபரா தம் விதிக்க, ஒப்பந்தம் வகை செய்கிறது. எனினும், ஒப்பந்தம் கையொப்பமான மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் இது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
நிலக்கரி உற்பத்தி:பொது துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், தற்போது 43.60 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நிலக்கரி உற்பத்தியை 46.40 கோடி டன்னாக உயர்த்தவும், இதில், மின் நிறுவனங்களுக்கு 34.70 கோடி டன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.நிலக்கரி விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சிலவிதிமுறைகளுக்கு, என்.டி.பி.சி. உள்ளிட்ட பல மின் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால் இந்நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|