பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
01:12

கொச்சி:நடப்பாண்டு, உலகளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி வளர்ச்சி 1.5 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என, இயற்கை ரப்பர் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு (ஏ.என்ஆர்.பி.சி) தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு, இதன் உற்பத்தி வளர்ச்சி 8.6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டு, உலகளவிலான இயற்கை ரப்பர் உற்பத்தி 1.05 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வியட்நாம்:சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி வளர்ச்சிக்கு சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.நடப்பாண்டில், சீனாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 6.6 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது போன்று, வியட்னாம் நாட்டின் இயற்கைரப்பர் உற்பத்தி 6 சதவீதம் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:இந்தியாவை பொறுத்தவரை, இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப் பாண்டில்,நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி,2.9 சதவீதம் வளர்ச்சி கண்டு 9.19 லட்சம் டன்னாக உயரும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டில், 8.93 லட்சம் டன்னாக இருந்தது. நாட்டின் இயற்கை ரப்பர் உற் பத்தி, சென்ற ஆண்டில், 4.9 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.இதே ஆண்டில், சீனா மற்றும் வியட்னாம் ஆகிய நாடு களின் இயற்கை ரப்பர் உற்பத்தி வளர்ச்சி, முறையே 5.8 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
சர்வதேச பொருளாதாரமந்தநிலை, ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் ஸ்திரமற்ற அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நடப்பாண்டு, இயற்கை ரப்பருக்கானதேவை குறையும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.
சீனா:சீனாவிலும் தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் உள்ளது. அந்நாட்டின் உற்பத்தி குறித்த அறிக்கையில், இறக்குமதி குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குங்டோ மாகாணத்தில், சென்ற மே மாதம், கிட்டங்கிகளின் இயற்கை ரப்பர் வினியோகம் குறைந்துள்ளது.கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மிக மோசமாக உள்ளது. இதுவும், இயற்கை ரப்பரின் வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது என ஏ.என்.ஆர். பி.சி.தெரிவித்துள்ளது.
ரப்பர் விலை வீழ்ச்சியை தடுப்பதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.பொதுவாக, கேரளாவில், இயற்கை ரப்பர் உற்பத்தி, மாதத்திற்கு 1-1.10 லட்சம் டன்னாக இருக்கும்.தற்போது,தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால், இம் மாநிலத்தின் ரப்பர் உற்பத்தி, ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் மாதத் திற்கு,60 ஆயிரம் மற்றும் 65 ஆயிரம் டன்னாக குறையும்.ரப்பர் விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் மழை பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ரப்பர் பால் வடிப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக ஏ.என். ஆர். பி.சி. தெரி வித்துள்ளது.
களையெடுக்கும் பணி:80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ரப்பர் மரங்களின் வயது 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.இதனால் இவற்றிலிருந்து,குறைந்த அளவிலேயே ரப்பர் உற்பத்தி ஆகிறது.இத்துடன்,ரப்பர் விலையும் குறைவாக உள்ளதால், இந்த மரங்களை வைத்திருப்பது, பொருளாதார ரீதியில் பயனளிக்காது என விவசாயிகள் கருதுகின்றனர். அதனால், நடப்பாண்டு, அதிக அளவில் ரப்பர் மரங்களை களையெடுக்கும் பணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா:தாய்லாந்தில் ரப்பர் மரங்களின் பரப்பளவு குறைவாக உள்ளதால், அங்கும், இயற்கை ரப்பர் உற்பத்தியும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில், இலையுதிர் காலம் தொடங்கியுள்ளதால், இயற்கை ரப்பர் உற்பத்தி குறையும். மலேசியாவை பொறுத்தவரை, ரப்பர் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், சிறு விவசாயிகள் ரப்பர் உற்பத்தியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
மொத்தத்தில், நடப்பாண்டு, இயற்கை ரப்பர் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், தேவைக்கும், அளிப்பிற்கும் இடையே பெரிய அளவிலான வேறுபாடு இருக்காது என, ஏ.என். ஆர்.பி.சி. தெரிவித்துள் ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பும், கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளதால், இயற்கை ரப்பர் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது என, இந்த அமைப்பு மேலும் தெரிவித் துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|