பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
10:02

ஐதராபாத்: ஆந்திரமாநிலத்தி்ல ஆளும் காங்கிரஸ் கட்சி பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளதால் லிட்டர் ஒன்றிற்கு 1.19 பைசா வரையி்ல் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் 50 பைசா வரையில் விலையை உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு வாட் வரியை குறைத்ததன் மூலம் மேலும் ஒரு ரூபாய் 19 பைசா வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி மாநிலத்தி்ல் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதி்க்குட்பட்ட பகுதிகளிலும் இந்தவிலை குறைப்பை அமல்படுத்த உள்ளது. இதற்காக தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெறப்பட்டு்ள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|