பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:29

புதுடில்லி:ரயில்வே சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் அதன் மீது சேவை வரியும் விதிக்கப்பட உள்ளது. இதனால், சரக்கு போக்குவரத்து கட்டணம் 3.6 சதவீதம் உயரும்.இது குறித்து மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் கூறியதாவது:ரயில்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகை இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரயில் சரக்கு போக்குவரத்து கட்டணத்தின் மீது, சேவை வரியும் விதிக்கப்படும். சேவை வரி சலுகையை நீட்டிக்கும்படி, வருவாய் துறையிடம், ரயில்வே அமைச்சகம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டிற்கு முன்பாக, ரயில்வே சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. நேற்று முன்தினம் சரக்குகள் மற்றும் பார்சல் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்த்தப்பட்டன. இந்நிலையில், ரயில்வே சரக்கு கட்டணத்தில் சேவை வரியும் விதிக்கப்பட உள்ளதால், ரயில் மூலம் கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இது, பணவீக்க அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|