பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
11:13
உலகளவில் மிகவும் விலை குறைந்த கார் என்ற பெருமை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ காருக்கு உண்டு. இந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 25.4 கி.மீ., மைலேஜ் தருவதாக, நிறுவனம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, நானோ டீஸல் கார் குறித்து பேச்சு எழுந்தது. எனினும், நானோ டீஸல் கார், வெளி வர இன்னும் சில காலமாகும். இதற்கிடையில், சி.என்.ஜி.,யில் இயங்கும், நானோ கார், நடப்பு நிதியாண்டில் வெளி வரும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் நானோ காரை விட, சி.என்.ஜி.,யில் இயங்கும் நானோ கார், செலவை குறைக்கும். இந்த காரில், 624 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் காரை விட, ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலை அதிகமாக இருக்கலாம். பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., என இரண்டு எரிபொருளிலும் இயங்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த வாகன கண்காட்சியில் இந்த கார், அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. இந்த காரில், 35 லிட்டர் சி.என்.ஜி., டேங்கும், 15 லிட்டர் பெட்ரோல் டேங்கும் பொருத்தப்பட்டிருக்கும். டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தி, பெட்ரோலில் இருந்து சி.என்.ஜி.,யில் இயங்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|