தங்கம் விலை சர்ர்ர்.... சவரனுக்கு ரூ.632 குறைவுதங்கம் விலை சர்ர்ர்.... சவரனுக்கு ரூ.632 குறைவு ... இந்தியாவின் ஜி.டீ.பி. வளர்ச்சி 6.7 சதவீதம்:ஐ.நா. மதிப்பீடு இந்தியாவின் ஜி.டீ.பி. வளர்ச்சி 6.7 சதவீதம்:ஐ.நா. மதிப்பீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டி.வி.எஸ்., ரேடியான் 125 பைக் இந்த ஆண்டில் ரிலீஸ்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2012
14:59

ஓசூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, டூவீலர் விற்பனையில், 3வது இடத்தில் இந்த நிறுவனம் இருந்து வந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக, ஹோண்டா நிறுவனம், டி.வி.எஸ்., நிறுவனத்துக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது. எனவே, வாகன விற்பனையை அதிகரிக்க செய்ய, புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனம் உள்ளது. இந்த ஆண்டு, டி.வி.எஸ்., சார்பில், இரண்டு பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், "ரேடியான் 125' என்ற பைக், டில்லியில் நடந்த வாகன கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த பைக், விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில், 125 சிசி ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின், டிஸ்கவர் 125, ஹோண்டாவின் ஷைன் 125 ஆகிய பைக்குகளுக்கு, டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதிய பைக், கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில் ஏற்கனவே விற்பனையில் இருந்து சக்கை போடு போட்ட, டி.வி.எஸ்., விக்டர் 110 பைக் மீண்டும் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன், புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தவும், இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)