பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
16:36
ஸ்மார்ட்போன்களை போன்று இப்போது ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. சோனி நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்த மாதத்தின் இறுதியில் வெளிவர இருக்கிறது. இதன் தொழில் நுட்பத்தினை கேட்டால், இதற்கு ஸ்மார்ட்வாட்ச் என்ற பெயர் சரி என்று தான் தோன்றும். இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனுடன் எளிதாக இணைக்க முடியும்.இந்த ஸ்மார்ட்வாட்ச் இ-மெயில், கேலன்டர், எஸ்எம்எஸ், நெட்வொர்கிங் அப்டேஷன் போன்ற வசதிகளை பயன்படுத்த உதவும். இன்றும் அதிகமாக எஸ்எம்எஸ் செய்யப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கையில் கட்டி கொண்டே ஃபேஸ்புக், ட்விட்டர் வலைத்தளத்தினை ஆராயலாம். புதிதாக அறிமுகமாக இருக்கும் இந்த சோனி ஸ்மார்ட்வாட்ச் ரூ.6,299 விலை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|