பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
16:23
ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில், டொயோட்டோ கரோலா அல்டீஸ் கார், இந்தியாவில் அறிமுகப்படுத்தி, 10 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில், லிமிடெட் எடிசன் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, "கரோலா அல்டீஸ் ஏரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 500 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வரும். இந்த காரில், 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. காரின் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், முகப்பு விளக்கு, பின்புற விளக்கு ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.11.47 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டில்லி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள கரோலா அல்டீஸ் பெட்ரோல் காரின் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.15.43 லட்சம் வரை உள்ளது. டீஸல் காரின் விலை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15.23 லட்சம் வரை உள்ளது. டீஸல் காரில் லிமிடெட் எடிசன் வருமா என்ற கேள்விக்கு, நிறுவனத்திடம் இருந்து நேரிடையான பதில் இல்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|