இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வுஇந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்ஸர் 200 என்ஸ் முன்பதிவு துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
12:46

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்ஸர் பைக்கை 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதற்கு இளைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாகவே, இருசக்கர வாகன விற்பனையில், இந்த நிறுவனத்தால் சாதனை படைக்க முடிந்தது. இந்த சூழ்நிலையில், பல்ஸர் 200 என்எஸ் என்ற பைக்கை, சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் முன்பதிவு, புனேயில் துவங்கியுள்ளது. எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.84,273ம், ஆன் ரோடு விலையாக ரூ.94,280ம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில், இந்த பைக்குக்கான முன்பதிவு படிப்படியாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில், லிக்யூடு கூல்டு 200 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக, இந்த பைக்கில், 3 ஸ்பார்க் பிளக் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பின் பக்க டயரில், மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக, மணிக்கு 136 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். 100 கி.மீ., வேகத்தை 9.8 வினாடிகளிலும், பூஜ்ஜியத்தில் இருந்து 60 கி.மீ., வேகத்தை, 3.6 வினாடிகளிலும் தொட்டு விடும். தொடர்ந்து, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சென்றால், லிட்டருக்கு 58 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)