ஏர் இந்தியா 5 விமானங்களை குத்தகைக்கு விட முடிவுஏர் இந்தியா 5 விமானங்களை குத்தகைக்கு விட முடிவு ... ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்யலாமா? ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்யலாமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியாவில் முதலீட்டு சூழல் கவலைக்கிடம்:உலக வங்கி தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2012
00:05

மும்பை:உள்நாட்டு பிரச்னைகளால், இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலீடுகளும் குறைந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. இது கவலை அளிக்கும் செய்தியாகும்.உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 6.9 சதவீதமாக இருக்கும். இது, 2013-14 மற்றும் 2014-15ம் நிதியாண்டுகளில் முறையே 7.2 சதவீதம் மற்றும் 7.4 சதவீதம் என்றளவில் இருக்கும்.
நிதி நெருக்கடி:ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி காரணமாக, தெற்காசிய நாடுகளின் ஏற்றுமதி சரி வடைந்துள்ளது. இதனால், கடந்த 2010ம் ஆண்டு 8.6 சதவீதமாக இருந்த, தெற்காசிய நாடுகளின் பொருளா தார வளர்ச்சி, சென்ற 2011ம் ஆண்டில், 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜோர்டான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கடன் அளவு அதிகமாக உள்ளது.
இந்நாடுகள், வரும் 2020ம் ஆண்டிற்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடன் அளவை 40 சதவீதமாக குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் பணவீக்கம் அதிகமாக இருப்பதுடன் நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை:ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால், வளர்ச்சி கண்டு வரும் பல நாடு களின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. தற்போது, இந்நாடுகளின்,மொத்த உள்நாட்டு உற்பத் தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை சராசரியாக 2.8 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்நாடுகளின் நடப்பு கணக்கு பற்றாக் குறை அதிகரிப்பிற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர்ந்து வருவதுதான் முக்கிய காரணம்.
அதேசமயம், நடப்பு 2012ம் ஆண்டில், வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, வளர்ச்சி காணும் நாடுகளின் பொருளாதாரம்,குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும்.குறிப்பாக,நடப்பு 2012ம் ஆண்டில்,உலகளவில், பொருளா தார வளர்ச்சி 2.5 சதவீதமாக வளர்ச்சி காணும் என்றும், இது, 2013ம் ஆண்டில், 3 சதவீதமாகவும், 2014ம் ஆண்டில், 3.3 சதவீதமாகவும் இருக்கும்.
கச்சா எண்ணெய்:வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில், வருவாய் மற்றும் தேவை வளர்ச்சி குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைந்த மூலதன வரத்து உள்ளிட்ட இடர் பாடுகள் உள்ளன. இருப்பினும் ஒட்டு மொத்த அளவில் நடப்பு 2012ம் ஆண்டில், இந் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகவும், இது, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில், முறையே 5.9 சதவீதம் மற்றும் 6 சதவீதம் என்றளவில் இருக்கும்.
கடந்த 2011ம் காலண்டர் ஆண்டின் நான்காவது காலாண்டில், சர்வதேச அளவில், தொழில் துறை உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுணக்க நிலை காணப் பட்டது. ஆனால், நடப்பு 2012ம் ஆண்டில் இது வரையிலுமாக,பல நாடுகளின் பொருளாதாரம், வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக, வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, வளர்ச்சி காணும் நாடுகளின் பொருளாதாரம், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மேம்பட்டுள்ளது.
வளர்ச்சி காணும் ஒரு சில நாடுகள், அவற்றின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதற்காக, இறக்குமதி யையும், அரசின் செலவினத்தையும் குறைத்து வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து, பல நாடுகள் இன்னும் முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால், அமெரிக்கா,ஜப்பான்,மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பொருளா தார வளர்ச்சி, குறைவாகவே உள்ளது.
ஐரோப்பிய நாடுகள்:குறிப்பாக, நடப்பு 2012ம் ஆண்டில், ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி -0.3 சதவீதம் என்றளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜப்பானில் 2.4 சதவீதம் என்றளவிலும்,
அமெரிக்காவில், 2.1 சதவீதம் என்றளவிலும் இருக்கும்.கடந்த 2011ம் ஆண்டில், மேற்கண்ட நாடுகளின் பொரு ளாதார வளர்ச்சி முறையே, 1.6 சதவீதம், -0.7 சதவீதம் மற்றும் 1.7 சதவீதம் என்றளவில் இருந்தது.ஒட்டு மொத்த அளவில் வளர்ச்சி, காணும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு 2012ம் ஆண்டில், 5.3 சதவீதம் என்றளவில் இருக்கும்.
­இது, கடந்த 2010ம் ஆண்டில், 7.4 சதவீதம் என்றளவிலும், 2011ம் ஆண்டில்,6.1 சதவீதம் என்றளவிலும் இருந்தது. இவ்வாறு உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)