ஏர் இந்தியா 5 விமானங்களை குத்தகைக்கு விட முடிவுஏர் இந்தியா 5 விமானங்களை குத்தகைக்கு விட முடிவு ... உலக ரப்பர் உற்பத்தி105 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பீடு உலக ரப்பர் உற்பத்தி105 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பீடு ...
ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்யலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2012
00:07

திருப்பூர்:"ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்வதற்கு முன், அத்தொழில் குறித்து நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்' என, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், தற்போது ஈமு கோழிப்பண்ணை தொழில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் ஈமு கோழி வளர்ப்பு தொழில் குறித்தும், அதில் முதலீடு செய்தால் பெருத்த லாபம் சம்பாதிக்கலாம் எனவும், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து வருகின்றன.
1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 7,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்; ஊக்கத்தொகை, தங்க நாணயங்கள், இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படும், இரண்டு ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என, விளம்பரம் செய்கின்றன.
ஈமு கோழி பண்ணை நிறுவனங்கள், அவற்றின் லாபம் குறித்தோ, முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் பங்கு குறித்தோ வெளிப்படையாக கூறுவதில்லை. மேலும், ஈமு கோழி, பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியில் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்தும் எவ்வித விவரத்தையும் தெளிவாக தெரிவிப்பதில்லை.எனவே, பொதுமக்கள், தங்கள் பணத்தை ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்வதற்கு முன், அத்தொழில் குறித்து நன்கு தெரிந்து கொண்டு, அதன்பின், முதலீடு செய்ய வேண்டும். கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 14,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)