பதிவு செய்த நாள்
18 ஜூன்2012
13:43

தேனி : மார்க்கெட்டிற்கு நெல் வரத்து, 80 சதவீதம் குறைந்து விட்டதால், அரிசி விலை, குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தேனி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும் திண்டிவனம், தஞ்சாவூர், மாயாவரம் பகுதிகளிலும் நெல் அறுவடை முடிந்து குறுவை சாகுபடி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேட்டூர், பெரியாறு, வைகை அணைகள் தற்போது சாகுபடிக்காக திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால், சாகுபடிக்கு நிலத்தடி நீரை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசும், இதற்காக 12 மணி நேரம் மும்முனை மின் சப்ளை வழங்குவதாக அறிவித்துள்ளது. குறுவை சாகுபடியால், மார்க்கெட்டிற்கு புது நெல் வர, இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும். தற்போது எல்லா இடங்களிலும், அறுவடை முடிந்து விட்டது. இருப்பு உள்ள நெல் மட்டுமே மார்க்கெட்டிற்கு வருகிறது. இதனால், வரத்து 80 சதவீதம் குறைந்து, அரிசி ஆலைகள் வாரத்தில் நான்கு நாட்கள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி விலை உயர்வு: கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அனைத்து ரக அரிசியும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
அரசு நெல்லுக்கான ஆதார விலையை, கிலோவிற்கு, 12.50 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இருப்பினும், வெளிமார்க்கெட்டில், நெல் விலை, 13.50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், அரிசி விலை, "கிடு கிடு'வென உயர்ந்துள்ளது. அனைத்து ரக அரிசியும், குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. மொத்த மார்க்கெட்டில், ஐ.ஆர்., 20 மற்றும் கல்சர் ரக அரிசி, 2,350 ரூபாய் ஆகவும், செல்லப்பொன்னி, 2,450 ரூபாய் ஆகவும், டீலக்ஸ், 2,600 ரூபாய் ஆகவும், கர்நாடகா பொன்னி, 3,100 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. சில்லரை மார்க்கெட்டில், அனைத்து ரக அரிசிகளும், மேலும் 200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. "இன்னும் நான்கு மாதங்களுக்கு இந்நிலை நீடிக்கும்' என அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|