அன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவுஅன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவு ... தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்...பட்டு உற்பத்தி 46,000 டன்னாக உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
00:28

நாட்டில் பட்டு உற்பத்தியை, நடப்பு 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2012-17) இரண்டரை மடங்கு உயர்த்தி 46ஆயிரம் டன்னாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2,799 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பட்டு வாரியம் (சி.எஸ்.பீ.) முடிவு செய்துள்ளது.
மல்பரி பட்டு:இதே காலத்தில், மல்பரி பட்டு உற்பத்தியாகும் பரப்பளவை ஐந்து மடங்கு உயர்த்தி,1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து 8லட்சத்து50ஆயிரம் ஹெக்டேராக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மல்பரி பட்டு வகைகள், தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்பட்டு வரு கின்றன. ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், துசார், எரி மற்றும் முகா வகை பட்டு அதிகம் உற்பத்தி யாகின்றன.
நாட்டிலேயே, கர்நாடகா மாநிலத்தில் மல்பரி பட்டு அதிக அளவில் உற்பத்தியாகிறது. பாரம்பரிய பட்டு உற்பத்தி மாநி லங்களுடன், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர கண்ட், ஹிமாசல பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும்,மல்பரி பட்டு உற்பத்தியை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் பட்டு உற்பத்தியைப் பரவலாக்க, பட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா:இது குறித்து மத்திய பட்டு வாரியத்தின் இணை இயக்குனர் கே.எஸ். மேனன் கூறும்பாது,"அண் மையில் மகாராஷ்டிரா மாநிலத் தலைமைச் செயலர், கர்நாடகத்தில் மல்பரி பட்டு உற்பத்தியாகும் பகுதிகளைப் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து35துணைஆணையர்கள் அடங்கிய குழுவும்,இப்பகுதிகளை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில், மகாராஷ்டிராவில், மல்பரி பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், புதியபகுதிகளில் சி.எஸ்.ஆர்.2-4 உள்ளிட்ட பைவோல்டின் பட்டு வகைகளுடன், புதிய பட்டு வகைகளை அறிமுகப்படுத்தவும் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த இனங்களுக்கு, நல்ல ஆரோக்கி யமான, வேளாண் சார்ந்த பருவச் சூழல் தேவைப்படுகிறது என்றார்.
தொழில்நுட்பம்:"இதுவரை பாரம்பரிய பட்டு வகைகளை உற்பத்தி செய்து வரும் மாநிலங்கள், தற்போது மல்பரி பட்டு இனங்களை உற்பத்தி செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றன' என தேசிய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி இஷிதா ராய் தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப, மல்பரி பட்டு உற்பத்தி மேற்கொள்வது தொடர்பாக வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பட்டுக் கூடுகளை பதப்படுத்துவது, பட்டு நூலிழை உருவாக்குவது, சாயமிடுதல் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு நூலிழையை சந்தைப்படுத்துதல் உட்பட, அனைத்து வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பட்டு வாரியம் ஏற்படுத்தி தரும்.மேலும், பாரம் பரிய பட்டு வளர்ப்பு மாநிலங்களில், வர்த்தக ரீதியில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டு வரும் தொழில் நுட் பங்களையும் வழங்கும்என ராய் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில்பட்டு உற்பத்தி,பதப்படுத்துதல், சாயமிடுதல் மற்றும் பட்டு ஆடைகள் தயாரிப்பு குறித்த தொழில் நுட்பங்களைப் பெறவும் தேசிய பட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரேசில், ஜப்பான் மற்றும் தாய் லாந்து நாடுகளுடன், வாரியத்தின் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட்:மல்பரி பட்டு தவிர, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் துசார்,முகா,எரிபோன்ற பட்டு இனங் களின் உற்பத்திப் பகுதிகளை விரிவாக்கம் செய்யவும்,தேசிய பட்டு வாரியம் தீவிர முயற்சி மேற் கொண் டுள் ளது.சென்ற 2011-12ம் நிதி ஆண்டில், நாட்டின் கச்சா பட்டு உற்பத்தி 12.6 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.அதே சமயம், சென்ற நிதியாண்டில், பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், பட்டு ஏற்றுமதி 26.5 சதவீதம் குறைந்து,2,863 கோடி ரூபாயில் இருந்து, 2,104 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தின் மந்தமான வளர்ச்சியால், பட்டு ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. நம்நாட்டிலிருந்து, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு பட்டு வகை ஏற்றுமதி ஆகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)