அன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவுஅன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவு ... தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி கார்களுக்கு தள்ளுபடி சலுகை எவ்வளவு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
11:44

பெட்ரோல் விலை உயர்வு, பெட்ரோல் கார்கள் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல் கார்கள் உற்பத்தியை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கும், அளவுக்கு மாருதி சுசூகி நிறுவனம் சென்று விட்டது. ஆல்டோ, எஸ்திலோ மற்றும் வேகன் ஆர் ஆகிய மாடல் கார்கள் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இத்துடன், தனது பல மாடல் பெட்ரோல் கார்களுக்கு மாருதி சுசூகி நிறுவனம் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.அதன்படி, எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதன் விவரம் வருமாறு:
மாருதி 800 - ரூ.19,000; ஆல்டோ எஃப்8டி- ரூ.50,000; ஆல்டோ எஃப்9டி சி.என்.ஜி., எல்எக்ஸ்ஐ- ரூ.45,000; ஆல்டோ கே10- ரூ.50,000; ஏ -ஸ்டார் -ரூ.50,000; வேகன்ஆர் பெட்ரோல்- ரூ.50,000; வேகன்ஆர் தியோ -ரூ.43,000; வேகன்ஆர் சி.என்.ஜி., -ரூ.50,000; எஸ்திலோ பெட்ரோல்- ரூ.55,000; எஸ்திலோ சி.என்.ஜி., -55,000; ஆம்னி அனைத்து வேரியன்ட்கள் -ரூ.12,000; எக்கோ பெட்ரோல்- ரூ.15,000; எக்கோ சி.என்.ஜி., -ரூ.15,000; ஸ்விஃப்ட் பெட்ரோல் - ரூ.15,000; ரிட்ஸ் பெட்ரோல் -ரூ.41,000; ரிட்ஸ் டீஸல்- ரூ.20,000; எஸ்எக்ஸ்4 பெட்ரோல்-ரூ.70,000; எஸ்எக்ஸ்4 டீஸல் - ரூ.70,000; எஸ்எக்ஸ்4 சி.என்.ஜி.,- ரூ.70,000.
பெட்ரோல் கார்களுக்கு இணையாக, இரண்டு மாடல் டீஸல் கார்களுக்கும், மாருதி சுசூகி நிறுவனம் தள்ளுபடி சலுகை அளித்துள்ளது. அந்த வகையில், ரிட்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் 4 டீஸல் மாடல் கார்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. ரிட்ஸ் டீஸல் கார் விரைவில் புதுப்பொலிவு பெற உள்ளது. எனவே, ஏற்கனவே ஸ்டாக் உள்ள ரிட்ஸ் டீஸல் கார்களுக்கு இந்த சலுகை கிடைத்துள்ளது. எஸ்எக்ஸ்4 டீஸல் கார் விற்பனையில் தொய்வு ஏற்படுவதால், சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் கார்களுக்கு இணையாக, சி.என்.ஜி., மற்றும் எல்.பி.ஜி., கார்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸையர் மற்றும் எர்டிகா ஆகிய மாடல் கார்களுக்கு மட்டும் தான் மாருதி சுசூகி நிறுவனம் தள்ளுபடி சலுகை அறிவிக்கவில்லை.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)