பதிவு செய்த நாள்
22 ஜூன்2012
03:37
மும்பை:நாட்டின், பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று அதிக, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மதியம் வரையில், சுணக்கமாக இருந்த பங்கு வர்த்தகம், கடைசி, ஒரு மணி நேரத்தில் சூடுபிடித்தது. பல, முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை, சாதகமாகப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கி, அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியை, ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் ஏதும் அறிவிக்காதது, மற்றும் சீனாவில், தயாரிப்புத் துறை வளர்ச்சி குறையும், என்ற மதிப்பீடு போன்றவற்றால், ஐரோப்பா, மற்றும் இதர, ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், சுணக்கம் கண்டது. இருப்பினும், இந்த பின்னடைவு இந்திய பங்குச் சந்தைகளில், எதிரொலிக்கவில்லை.ரூபாய் மதிப்புஅன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, அதிகளவில் முதலீட்டை விலக்கிக் கொண்டதாலும், இறக்குமதியாளர்கள், அதிகளவில் டாலரை வாங்கியதாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, நேற்று, முன் எப்போதும் இல்லாத அளவாக, 56.57 ஆக வீழ்ச்சி கண்டது.
பின்பு, வர்த்தகம் முடியும்போது, ஓரளவிற்கு சரிவிலிருந்து மீண்டு, 56.30ல் நிலை கொண்டது.நேற்று, நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், வங்கி, மின்சாரம், உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை, குறைந்து காணப்பட்டது.
குறியீட்டு எண்மும்பை, பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 135.93 புள்ளிகள் அதிகரித்து, 17,032.56 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,050.44 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,799.63 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 5 நிறுவனப் பங்கு களின் விலை குறைந்தும், இருந்தது.தேசிய, பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 44.45 புள்ளிகள் உயர்ந்து, 5,165 புள்ளிகளில், நிலைகொண்டது. வர்த்தகத்தின், இடையே அதிகபட்சமாக, 5,170.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,093.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|