பதிவு செய்த நாள்
22 ஜூன்2012
10:56
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 56.87 ஆக இருந்தது. இது சற்று நேரத்திலேயே ரூ. 57.08 ஆக குறைந்து காணப்பட்டது. டாலரின் தேவை அதிகரித்ததன் காரணமாகவும், யூரோவிற்கு எதிரான டாலரின் மதிப்பும் அதிகரித்து வருவதின் காரணமாகவும் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, அதிகளவில் முதலீட்டை விலக்கிக் கொண்டதாலும், இறக்குமதியாளர்கள், அதிகளவில் டாலரை வாங்கியதாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவாக, 56.57 ஆக வீழ்ச்சி கண்டது. பின்பு, வர்த்தகம் முடியும்போது, ஓரளவிற்கு சரிவிலிருந்து மீண்டு, 56.30ல் நிலை கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|