பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
00:19

பெங்களுரு: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் விமான வாடகை செலுத்தாததால், அந் நிறு வனத்திற்கு வழங்கப்பட்ட 34 விமானங்களை, குத்தகை நிறுவனங்கள் திரும்ப எடுத்துக் கொண்டன.ஆனால், இதை மறுத்துள்ள கிங்பிஷர் நிறுவனம், சென்ற மார்ச் முதல் நடப்பு ஜூன் வரையிலான காலத்தில், தாமே முன்வந்து சம்பந்தப்பட்ட விமானங்களை ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளது.
விஜய்மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 7,500 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக் கிறது. சென்ற மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் 1,151 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது.
இந்நிறுவனம், பல்வேறு வழித்தடங்களில், அதன் விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில்,நேற்று இதன் பங்கின் விலை,13சதவீதம் சரிவடைந்து,11.62 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்து போனது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|