பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
00:21

புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, 16 ஆயிரம் கோடி டாலராக (8 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதே நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில், பாதி தொகையாகும் என, அசோசெம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி:நாட்டின் ஏற்றுமதி வருவாயில், தகவல் தொழில்நுட்பம் மற்றும், அது சார்ந்த சேவை துறைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. அதுபோன்று, இறக்குமதியில், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும், வெள்ளி உலோகங்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 30 ஆயிரம் கோடி டாலரை (16 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ) தாண்டியுள்ளது. அதுசமயம், இறக்குமதி, 48 ஆயிரத்து 500 கோடி டாலர் என்றளவில் அதிகரித்துள்ளது.
வர்த்தகபற்றாக்குறை:ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்ததையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 18 ஆயிரத்து 500 கோடி டாலராக (10 லட்சத்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது,கடந்த 2010- 11ம் நிதியாண்டில், 10 ஆயிரத்து 440 கோடி டாலர் (5 லட்சத்து 74 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) என்றள வில் இருந்தது.சென்ற நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 16 ஆயிரம் கோடி டாலராக (8 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி, உலோகங்களின் இறக்குமதி, 6,000 கோடி டாலர் (3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்) என்றளவில் உள்ளது.
சென்ற நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதி செலவினத்தில், கச்சா எண்ணெய்,தங்கம்,வெள்ளி ஆகியவற்றின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்து வருவதால், வர்த்தக மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
பங்களிப்பு:இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத் தில், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அசோசெம் தலைவர் ராஜ்குமார் தூத் கூறும்போது," ஐந்து ஆண்டுகளுக்கு முன், நாட்டின் இறக்குமதியில், கச்சா எண்ணெய் பங்களிப்பு, 40 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 53 சதவீதமாக அதிகரித்துள்ளது' என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|