பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
00:22

மும்பை:சென்ற 2011ம் ஆண்டின், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்திய வங்கிகள் திரட்டிய டெபாசிட், அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 17.3 சதவீதம் வளர்ச்சிகண்டு, 58 லட்சத்து 10 ஆயிரத்து 546 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலாண்டுகளில், வங்கிகள் வழங்கிய கடன், 16.1 சதவீதம் அதிகரித்து,43 லட்சத்து 87ஆயிரத்து179 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் திரட்டிய டொபசிட் மற்றும் வழங்கிய கடன்கள் முறையே, 1 லட்சத்து 68 ஆயிரத்து 703 கோடி ரூபாய் மற்றும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 992 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், திரட்டப்பட்ட ஒட்டுமொத்த டெபாசிட்டில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளின் பங்களிப்பு, 21.9 சதவீதம் என்றளவில் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|