பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
00:25

ஜாம்ஷெட்பூர்:நாட்டின் பொருளாதார மந்தநிலையின் பாதிப்பு காரணமாக, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையின் உற்பத்தியை மூன்று நாட்கள் நிறுத்த முடிவு செய்துள்ளது.இது குறித்து டாட்டா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் பி.ஜே.சிங் கூறும்போது," நிறுவனம் சந்தையை சார்ந்துள்ளதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு முடிவடைவதையொட்டி, அதிக அளவில் உற்பத்திப் பொருளை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளை (இன்று) முதல் வரும் 30ம் தேதி வரை தொழிற்சாலையின் ஒரு பிரிவு மூடப்படும்' என்றார்.
டெல்கோ தொழிற்சங்க பொதுச் செயலர் சந்திரபான் சிங் கூறுகையில்,"கடந்த இரண்டு மாதமாகவே குறைந்து வந்த தொழிற்சாலையின் உற்பத்தி, சென்ற 23ம் தேதிக்கு பிறகு தவிர்க்க இயலாத கட்டத்தை எட்டியது. தொழிற் பிரிவு மூன்று நாள் மூடப்படுவதால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்' என்று தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|