பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
00:27

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று மந்தமாக இருந்தது. வர்த்தகம் துவங்கியது முதல் "சென் செக்ஸ்' 100 புள்ளிகள் வரையிலும், "நிப்டி' 30 புள்ளிகள் வரையிலும் ஏற்ற, இறக்கத்துடன் விறுவிறுப்பின்றி காணப்பட்டது.
இந்நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் சலுகை திட்டங்கள் அறி முகப்படுத்தப்படும் என்ற நிலைப்பாட்டாலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையாலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், வங்கி, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. இருப்பினும், டாட்டா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது,61.18 புள்ளிகள் அதிகரித்து, 16,967.76 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,029.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,930.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 21.10 புள்ளிகள் உயர்ந்து, 5,141.90 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,160.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,129.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|