பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
10:00

மும்பை: இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.24 புள்ளிகள் அதிகரித்து 17010 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12.40 புள்ளிகள் அதிகரித்து 5154.30 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மந்தமாக இருந்தது. வர்த்தகம் துவங்கியது முதல் 'சென் செக்ஸ்' 100 புள்ளிகள் வரையிலும், 'நிப்டி' 30 புள்ளிகள் வரையிலும் ஏற்ற, இறக்கத்துடன் விறுவிறுப்பின்றி காணப்பட்டது. இந்நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் சலுகை திட்டங்கள் அறி முகப்படுத்தப்படும் என்ற நிலைப்பாட்டாலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையாலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.56.96 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|