பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
04:20
சென்னை:ஜப்பானைச் சேர்ந்த தோஷிபா கார்ப்பரேஷனின், 100 சதவீத துணை நிறுவனமான, தோஷிபா இந்தியா, "சாட்டிலைட்' தொடர் வரிசை லேப்-டாப்களை அறிமுகம் செய்துள்ளது.அதிநவீன தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உயர் திறன் கொண்ட கேமரா உள்ளடங்கிய, சி850, எம்840 மற்றும் எல்850 லேப்-டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் விலை முறையே, 23 ஆயிரம், 41 ஆயிரம் மற்றும் 56 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, "அல்ட்ராபுக் சாட்டிலைட் யு840' என்ற புதிய வகை லேப்-டாப் சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14 அங்குல திரை, நாள் முழுவதும் நீடிக்கக் கூடிய பேட்டரி, 32 ஜி.பி., எஸ்.எஸ்.டீ.,யுடன் இணைந்த 500ஜி.பி ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை, 1,400 டாலர் (77 ஆயிரம் ரூபாய்) என்றளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|