ரூபாய் மதிப்பு சரிவால் எண்ணெய், பருப்பு விலை கிடு கிடுரூபாய் மதிப்பு சரிவால் எண்ணெய், பருப்பு விலை கிடு கிடு ... வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை முற்றிலும் நீக்கியது மத்திய அரசு! வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை முற்றிலும் நீக்கியது மத்திய அரசு! ...
உலகளவில் விலை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதி செலவினம் குறையும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2012
02:38

சர்வதேச அளவில், கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களின் விலை சரிவடைந்துள்ளது. இதனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இவற்றின் இறக்குமதி செலவினம், 12.3 சதவீதம் சரிவடையும் என, தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
இறக்குமதி செலவினம்:கடந்த 2011-12ம் நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், ஒட்டு மொத்த அளவில், இறக்குமதி செலவினம், 6,000 கோடி டாலர் குறையும் என தெரிகிறது. சென்ற முழு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த இறக்குமதி செலவினம், 48 ஆயிரத்து 860 கோடி டாலராக இருந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், ஒட்டு மொத்த இறக்குமதி செலவினம், 42 ஆயிரத்து 860 கோடியாக இருக்குமென தெரிகிறது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் பொழுது, நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2011-12ம் நிதியாண்டில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் சராசரி விலை, 112 டாலராக இருந்தது.
இது, தற்போது, சராசரியாக 90-91 டாலராக குறைந்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் வெகுவாக குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், 15 ஆயிரத்து 560 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, கடந்த நிதியாண்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செலவினம், 6,150 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 25 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனாலும், இதன் இறக்குமதி செலவினம் அதிகரித்தது.
இதைக் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தங்க இறக்குமதி மீதான சுங்க வரி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தற்போது, தங்க இறக்குமதி குறைந்துள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில், தங்க இறக்குமதி, 430 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
கூடுதல் வரி:அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே இரண்டு மாதங்களில், இதன் இறக்குமதி 920 கோடி டாலராக இருந்தது. தங்க இறக்குமதி மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதையடுத்து, நடப்பு முழு நிதியாண்டில், தங்க இறக்குமதி, 35-40 சதவீதம் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, நடப்பு நிதியாண்டில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செலவினம் 4,000 கோடி டாலருக்கும் கீழாக குறையுமென மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் இதன் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.
மேலும், சென்ற 2011-12ம் நிதியாண்டில், பட்டை தீட்டப்பட்ட வைர இறக்குமதி 1,440 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இதன் மீது, 2 சதவீத இறக்குமதி தீர்வை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, பட்டை தீட்டப்பட்ட வைர இறக்குமதியும் குறைந்துள்ளது.
இதற்கு, எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இதன் இறக்குமதி 55 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே இரண்டு மாதங்களில், இதன் இறக்குமதி 310 கோடி டாலராக இருந்தது. நடப்பு முழு நிதியாண்டில், பட்டை தீட்டப்பட்ட வைர இறக்குமதி செலவினம், கடந்த நிதியாண்டை விட, 1,100 -1,200 கோடி டாலர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்:நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் பங்களிப்பு 50 சதவீத அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வெள்ளியன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 1.17 ரூபாய் உயர்ந்து, 55.64 ஆக அதிகரித்துள்ளது.
ரூபாயின் வெளிமதிப்பு மேலும் வலுவடையும் நிலையில் சர்வதேச அளவில் விளை பொருட்களின் விலை குறைந்து வருவதின் பலன் நமக்கு கிடைக்கும். மேலும், கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செலவினம் குறைவதுடன், நாட்டின் வர்த்தக மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை, குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)