பதிவு செய்த நாள்
07 ஜூலை2012
00:19

சென்னை:சென்னையைச் சேர்ந்த பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம், பல்வேறு நிறுவனங்களின் அலைபேசி சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து இந் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்.யுவராஜ் கூறியதாவது:கடந்த 2004ம் ஆண்டு, 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று பல நூறு கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், நிறுவனத்தின் விற்றுமுதல் 660 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதனை, நடப்பு நிதியாண்டில், 1,000 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நிறுவனத்திற்கு, 42 நகரங்களில், 134 விற்பனை மையங்கள் உள்ளன. அடுத்த ஓர் ஆண்டிற்குள், கூடுதலாக, 50 விற்பனை மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு பணியாளர்களுடன் துவங்கப்பட்ட நிறுவனத்தில், தற்போது, 1,800க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு யுவராஜ் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|