பதிவு செய்த நாள்
07 ஜூலை2012
00:23

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மந்தமாக காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாபம் நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
ஜெர்மனியின் தொழில்துறை உற்பத்தி குறித்த தகவல் வெளியாவதை முன்னிட்டு, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, நுகர்பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், உலோகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 17.55 புள்ளிகள் சரிவடைந்து, 17,521.12 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,554.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,425.47 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 10.35 புள்ளிகள் குறைந்து, 5,316.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,327.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,287.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|