பதிவு செய்த நாள்
07 ஜூலை2012
16:07

கார் தயாரிப்பில் புகழ்பெற்ற அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் ஒன்77 கார் பெயரிலேயே புதிய கார்பன் ஃபைபர் சைக்கிளை தயாரித்துள்ளது.. விலைதான் கொஞ்சம் தலையை சுற்ற வைக்கிறது. இந்த சைக்கிளின் விலை 21 லட்சமாம். பார்முலா ஒன் கார்கள் தயாரிக்க பயன்படும் கார்பன் ஃபைபர் மற்றும் உறுதியான ஹேண்டிகிராப்ட் அலுமினியத்தில் இந்த சைக்கிள்உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. பார்முலா ஒன் கார்களுக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் பிரபல பிஎப்1 நிறுவனம் இந்த சைக்கிளுக்கும் பாகங்களை சப்ளை செய்துள்ளது.மேலும், இதில் எலக்ட்ரானிக் சாதனமும் பொருத்தப்பட்டுள்ளது. இது சைக்கிள் ஓட்டுபவரின் பெர்ஃபார்மென்சை புட்டு புட்டு வைத்துவிடும். 7 கலர்களில் இந்த சைக்கிள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது லிமிடேட் எடிசன் என்பதால் மொத்தமே 77 சைக்கிள்களை மட்டுமே தயாரிக்கிறது அஸ்டன் மார்ட்டின்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|