பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
00:50

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்திய ரயில்வேயின் ஒட்டு மொத்த வருவாய், 20.73 சதவீதம் உயர்ந்து, 29,903 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், சரக்கு கட்டண வருவாய், 26.19 சதவீதம் உயர்ந்து, 21 ஆயிரத்து 205 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பயணிகள் போக்குவரத்து வாயிலான வருவாய், 9.16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,462 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நிலக்கரி, உருக்கு மற்றும் சிமென்ட் ஆகியவற்றை கையாள்வது 5 சதவீதம் அதிகரித்துள்ளதால், சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது.சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரயில்வே துறையின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|