பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
01:02

ஓசூர்: ஓசூர் தாலுகாவில் கடும் வறட்சியால், ரோஜா செடிகளில் சாம்பல் நோய் தாக்கி, மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில் காணப்படும் நல்ல செம்மண் வளம், குளிர்ந்த சீதோஷ நிலையை பயன்படுத்தி, விவசாயிகள் ரோஜா, அலங்கார மலர்கள், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்திரேலியா:இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், ஆண்டு முழுவதும் மலேசியா, இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் ஏற்றுமதியாகிறது.காதலர் தினம், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்கள் நேரத்தில், பல லட்சம் மலர்கள் ஏற்றுமதியாகின்றன. இரு ஆண்டாக, ஓசூர் பகுதியில் நிலவும் மாறுபட்ட தட்பவெப்ப நிலை, அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தியதால், மண்ணின் தன்மையில் ஏற் பட்டுள்ள மாறுபாடு மற்றும் வறட்சியால் சாகுபடி பரப்பு குறைந்து, மலர் உற்பத்தியும் குறைந்துள்ளது.ஓசூர் தாலுகாவில் கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியது. தற்போது பெய்ய வேண்டிய, தென்மேற்கு பருவமழையும் தாமதமாகி வருகிறது.
சொட்டு நீர் பாசனம்:அதனால், ஓசூர் பகுதியில் கடும் வறட்சியால் ஆழ் துளை கிணறுகள் வறண்டன. பொதுவாக ரோஜா செடிகளுக்கு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து, சொட்டு நீர் பாசனம் மூலமே, நீர் பாசனம் நடக்கிறது.தற்போது, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், பசுமை குடோன் அமைத்த விவசாயிகள், ரோஜா செடிகளை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து, தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.வெப்பத்தின் தாக்குததால் ரோஜா செடிகளில், சாம்பல் நோய், 'த்ரிப்ஸ்' ஆகிய இரு நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நோய்களை கட்டுப்படுத்த முடியாமலும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
மலர் ஏற்றுமதி:ஓசூரை சேர்ந்த மலர் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:இந்த நோய் தாக்குதலால் இலைகள், மொட்டுகள் கருகி, கீழே உதிர்ந்து விடுகின்றன. உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் மாதந்தோறும், 50 லட்சம் மலர்களும், காதலர் தினத்தையொட்டி, ஒரு கோடி மலர்களும் ஏற்றுமதியானது. தற்போது, மாதம், 5 லட்சம் மலர்கள் ஏற்றுமதி ஆவதே அபூர்வமாக உள்ளது என்றார்.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|