அவந்தா பவர் நிறுவனம் ரூ.1,500 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் அவந்தா பவர் நிறுவனம் ரூ.1,500 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
ஜூன் மாதத்தில் பணவீக்கம் 7.25 சதவீதமாக சரிவு : வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2012
23:54

புதுடில்லி: நாட்டின் பொது பணவீக்கம், நடப்பாண்டு ஜூன் மாதத்தில், 7.25 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்ற மே மாதத்தை (7.55 சதவீதம்) விட, 0.30 சதவீதம் குறைவாகும். கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில், நாட்டின் பணவீக்கம், 9.51 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.நாட்டின் பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக, தயாரிப்பு பொருட்களின் விலை குறைந்துள்ளதால், ஒட்டுமொத்த அளவில் பணவீக்கம் சரிவடைந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், முதல் மதிப்பீட்டில், பணவீக்கம் 7.23 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 7.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கிசென்ற ஜூன் மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, இம்மாதம் 31ம் தேதி வெளியிட உள்ள நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான,"ரெப்போ ரேட்' விகிதங்களை குறைக்கக் கூடும் என, சந்தை வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, ஜூன் மாதம் 18ம் தேதி நடைபெற்ற அதன் நிதி ஆய்வு கூட்டத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணவீக்கம் அதிகமாக உள்ளது என்ற காரணத்தால், ரிசர்வ் வங்கி, இந்த வட்டி விகிதங்களை குறைக்கவில்லை.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம், 7.62 சதவீதமாக இருக்கும் என, பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் மதிப்பீடு செய்திருந்தன. ஆனால், இந்த மதிப்பீட்டுகளை விட, பணவீக்கம் குறைந்துள்ளது என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பருவ மழைஇதுகுறித்து பிரமதரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறும்போது,"கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நாட்டின் பணவீக்கம், 7 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. பருவ மழை தீவிரம் அடைந்து, வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், பல்வேறு உணவு பொருட்களின் விலை குறையும். இது, பணவீக்கத்தை மேலும் குறைக்க உதவும்' என்றார்.உணவு பணவீக்கம்ஒட்டுமொத்த அளவில், பணவீக்கம் குறைந்துள்ளது என்றாலும், சென்ற ஜூன் மாதத்தில், உணவு பணவீக்கம் 10.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த மே மாதத்தில், 10.74 சதவீதமாக இருந்தது. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு, உணவு பணவீக்கம் அதிகரித்திருப்பதே முக்கிய காரணமாகும்.மொத்த விலை குறியீட்டு எண் கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 64.97 சதவீதமாக உள்ளது. இதன் பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், 5 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. இது, மே மாதத்தில், 5.02 சதவீதமாக இருந்தது. எரி பொருள் பணவீக்கம், 10.27 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 11.53 சதவீதமாக இருந்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, சரிவடைவது பாதகமான அம்சமாக உள்ளது.பணவீக்கம் மற்றும் வட்டி செலவினம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியால், உலகளவில் பொருளாதார வளர்ச்சியில், மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு 2012ம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கடந்த 2011-12ம் முழு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் என்றளவில் இருந்தது.வர்த்தக பற்றாக்குறைசென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் குறைந்துள்ளது. குறிப்பாக, இறக்குமதி குறைந்ததை அடுத்து, வர்த்தக பற்றாக்குறையும் குறைந்துள்ளது. சென்ற ஜூன் மாதத்தில், ஏற்றுமதி, 5.45 சதவீதமும், இறக்குமதி, 13.46 சதவீதமும் சரிவடைந்திருந்தது. குறிப்பாக, சென்ற ஜூன் மாதத்தில்,கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி மதிப்பு, 1,260 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, சென்ற மே மாதத்தில், 1,500 கோடி டாலராக இருந்தது. ஆக, இவ்விரு மாதங்களுக்கு இடையில், எண்ணெய் இறக்குமதி செலவினம், 16 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற மே மாதத்தில், 3.8 சதவீதமாக உயர்ந்திருந்தது. இது, சென்ற ஏப்ரலில், 3.1 சதவீதமாக இருந்தது. நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மந்தம் அடைந்துள்ளதை அடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)