ஜூன் மாதத்தில் பணவீக்கம் 7.25 சதவீதமாக சரிவு : வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஜூன் மாதத்தில் பணவீக்கம் 7.25 சதவீதமாக சரிவு : வங்கிகளுக்கான வட்டி விகிதம் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
முதல் இடத்தில் ஆடி கார் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2012
12:00

இந்தியாவில், அதிக விலை கொண்ட சொகுசு கார் விற்பனையில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ., மற்றும் ஆடி கார் நிறுவனங்கள் தான் சக்கை போடு போடுகின்றன. இதில், ஆடி நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. ஜூன் மாத விற்பனையை பொறுத்தவரை ஆடி நிறுவனமே முதலிடத்தில் உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சொகுசு கார்கள் விற்பனை விவரத்தை, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம்( சியாம்) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆடி கார் நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 52.15 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இந்த நிறுவனம், 1254 கார்களை விற்பனை செய்து இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இது, 1908 கார்கள் விற்பனை என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 12.16 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு காலத்தில், இந்த நிறுவனம், 2377 கார்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது இது, 2,088 கார்கள் விற்பனை என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனையும், 24.41 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம், 1663 கார்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது இது, 1,257 கார்கள் விற்பனை என்ற அளவுக்கு குறைந்து விட்டது. ஜூன் மாத கார்கள் விற்பனையில், முதலிடத்தில் இருந்த பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தை, ஆடி நிறுவனம் பின்னுக்கு தள்ளிவிட்டது. இந்த மாதத்தில், ஆடி நிறுவனம் 759 கார்களையும், பி.எம்.டபிள்யூ., நிறுவனம், 750 கார்களையும் விற்பனை செய்துள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ஆடி நிறுவனம் 354 கார்களையும், பி.எம்.டபிள்யூ., நிறுவனம், 800 கார்களையும் விற்பனை செய்து இருந்தன. பென்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில், 622 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 566 கார்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உலகளவில் கார் விற்பனையில், பென்ஸ் நிறுவனத்தை, ஆடி நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. இந்தியாவில், இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆடி இரண்டாவது இடத்தை பிடித்தது. ஜூன் மாதத்தில், பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து விட்டது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)