அலைபேசி பண பரிமாற்றம் ஐந்து மடங்கு வளர்ச்சி அலைபேசி பண பரிமாற்றம் ஐந்து மடங்கு வளர்ச்சி ... வரும் 25ம் தேதி முதல் இரு நாட்கள் :வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வரும் 25ம் தேதி முதல் இரு நாட்கள் :வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ...
இந்தியா,சீனாவின் மந்தநிலையால்... உலக பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2012
23:51

புதுடில்லி: நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக குறையும் என, பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் கடன் பெருகி வருவது, இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது, போன்றவைதான், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைய காரணம் என, இந்த நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம்மேலும் விவரங்கள் வருமாறு:நடப்பாண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 3.6 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஏப்ரலில் மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 0.7 சதவீதம் குறைந்து, 6.1 சதவீதமாக இருக்கும். இது,வரும் 2013ம் ஆண்டில், 6.5 சதவீதமாக உயரும். சென்ற 2011ம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.1 சதவீதமாகவும், முந்தைய 2010ம் ஆண்டு, 10.8 சதவீதமாகவும் உயர்ந்து காணப்பட்டது.நடப்பாண்டு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 0.2 சதவீதம் குறைந்து, 8 சதவீதமாக சரிவடையும். இது, வரும் 2013ம் ஆண்டில், 8.5 சதவீதமாக இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி, சென்ற 2011ம் ஆண்டில், 9 சதவீதமாகவும், அதற்கு முந்தைய 2010ம் ஆண்டில், 10.4 சதவீதமாகவும் இருந்தது. 2010ம் ஆண்டு, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு, சீனாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்தது.இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் உள்ளது. இருந்தபோதிலும், வளரும் பரவலான பொருளாதார நாடுகளின் வரிசையில், அதிவேக வளர்ச்சி கொண்ட இரண்டாவது நாடு என்ற பெருமையை, இந்தியா தக்கவைத்துக் கொண்டுள்ளது.ரஷ்யாஇந்த பட்டியலில், அடுத்து இடம் பெற்றுள்ள ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில், 4 சதவீதமாக இருக்கும். அதுபோன்று பிரேசில், தென்னாப்பிரிக்கா,மெக்சிகோ ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, முறையே, 2.5 சதவீதம், 2.6 சதவீதம் மற்றும் 3.9 சதவீதமாக இருக்கும்.வளர்ந்த நாடுகளின் கடன்கள் குறைந்து,வளரும் நாடுகளில் நிதிப்புழக்கம் அதிகரிக்கும்பட்சத்தில், வரும் 2013ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 3.9 சதவீதமாக உயரும்.நடப்பாண்டில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, 2 சதவீதமாக இருக்கும். இது, சென்ற ஆண்டில், 1.7 சதவீதமாக இருந்தது. இதே ஆண்டுகளில், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, 6.2 சதவீதத்தில் இருந்து, 5.6 சதவீதமாக குறையும்.ஐரோப்பாஇதே போன்று, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, 1.5 சதவீதத்தில் இருந்து, நடப்பு ஆண்டில் மைனஸ் 0.3 சதவீதமாக குறையும். அமெரிக்கா மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, சென்ற ஏப்ரலில் மதிப்பிட்டதை விட, தலா, 0.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏதும் இல்லை.சர்வதேச அளவில் பல நாடுகள், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மாறாக, மேலும் சுணக்கம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஐரோப்பியாவில், நிதிச் சந்தை மற்றும் அரசுகளின் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. பெரும்பாலான வளரும் நாடுகளின் பொருளாதாரம், மதிப்பீட்டை விட குறைந்துள்ளது.உலகின் மிகப் பெரிய நாடான அமெரிக்காவின் பொருளாதாரம், மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், அது, சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க போதுமானதாக இல்லை. ஏனெனில், சீனா, இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாடுகளின் தயாரிப்புகளுக்கு உள்நாட்டிலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிலும் தேவைப்பாடு குறைந்துள்ளது.குறிப்பாக, சீனாவில், பல துறைகளில் உற்பத்தி திறன் உபரியாக உள்ளது. இதனால், முதலீட்டு நடவடிக்கைகள் குறைந்து, அந்நாடு இடர்பாடுகளை எதிர்நோக்க வாய்ப்புள்ளது.முதலீடு:இந்தியா போன்ற வளரும் நாடுகளில், முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வும், ஸ்திரத்தன்மையற்ற வளர்ச்சி நிலையும், பங்கு விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, மூலதனம் வெளியேறவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கும் வித்திடும்.ஐரோப்பிய கூட்டமைப்பில், போதுமான நிதி சீர்த்திருத்த கொள்கைகள் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பிலும், அண்மையில், வளரும் நாடுகளின் கொள்கைகள் தளர்த்தப்பட்டதன் அடிப்படையிலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)