சில்லரை பணவீக்கம்10.02 சதவீதமாக குறைவுசில்லரை பணவீக்கம்10.02 சதவீதமாக குறைவு ... சர்வதேச நிலவரத்திற்கு மாறாக... இந்தியாவில் அலுமினியம் உற்பத்தி தீவிரம் சர்வதேச நிலவரத்திற்கு மாறாக... இந்தியாவில் அலுமினியம் உற்பத்தி தீவிரம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
முட்டை விலை குறைந்ததால் கோழி விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2012
00:14

நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. அதன் மூலம் நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, உள்ளூர், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படு கின்றன. வெளிநாடுகளுக்கும், ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கேரளா:முட்டை உற்பத்தியில் ஈடுபடும் கோழிகள், 18வது வாரம் முட்டை உற்பத்திக்காக பண்ணைகளில் விடப்படு கின்றன. தொடர்ந்து, அந்தக் கோழிகள், 72 வாரம் வரை முட்டை உற்பத்தி செய்யும். அதன்பின், அவை இறைச்சிக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, முட்டைக் கோழிகள், கேரள மாநிலத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த, ஜூன் மாதம் துவக்கம் முதல், முட்டை விலை ஏற்றமான சூழலில் இருந்தது. அதனால், பண்ணையாளர்கள், முட்டைக் கோழி விற்பனையை குறைத்தனர். அதன் எதிரொலியாக, முட்டைக் கோழி விலை, வரலாறு காணாத அள வுக்கு உயரத் துவங்கியது. ஜூன், 16ம் தேதி, ஒரு கிலோ முட்டைக் கோழி விலை, 54 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப் பட்டது.
இது, முட்டைக் கோழி வரலாற்றில் அதிகபட்ச விலையாக கருதப்பட்டது. முட்டைக்கான தேவை மிகுதியாக இருப்ப தால், கோழியின் விலை மேலும் உயரும் என, பண்ணையாளர்கள் எதிர்பார்த்தனர். எனினும், விலை உயரவில்லை. 54 ரூபாய் என்ற விலையே, ஜூன், 25ம் தேதி வரை நீடித்தது. அதன்பின், ஜூன், 26ம் தேதி, முட்டைக் கோழியின் விலை, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு கிலோ, 48 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த விலை, ஜூலை மாதம் துவக்கம் வரை நீடித்தது.
இந்நிலையில், ஜூலை ஆரம்பம் முதல், முட்டை விலையிலும் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இதனால் முட்டைக் கோழி விலையும் சரிவை நோக்கிச் செல்கிறது.தற்போது, ஒரு கிலோ முட்டைக் கோழி, 38 ரூபாய் என, நிர்ணயம் செய் யப் பட்டுள்ளது. முட்டை விலை சரியும் பட்சத்தில், முட்டைக் கோழியின் விலையும் மேலும் சரியும் என, கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலப்பொருட்கள்:கோழிப்பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:மே, ஜூன் மாதங்களில், வழக்கத்துக்கு மாறாக முட்டையின் விலை, "கிடுகிடு'வென ஏற்றம் கண்டது. அதனால், பண்ணையாளர்கள், கோழிகளை விற்பனை செய்யவில்லை. மேலும், கோழித் தீவன மூலப்பொருட்களின் விலையேற்றத்தாலும், முட்டைக் கோழிகளின் விலை உயரத் துவங்கியது.
இச்சூழலில், ஜூலை துவக்கம் முதல், முட்டை விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முட்டை விலை இறங்கு முகமாக உள்ளது. முட்டை விலை சரிவு காரணமாக, பண்ணையாளர்கள், கோழிகளை அதிகளவில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.முட்டை விலை சரியும் பட்சத்தில், முட்டைக் கோழியின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)