பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
15:59

ஹூண்டாயிடம் 2ம் இடத்தை பறிகொடுத்து 3ம் இடத்தில் இருந்து வந்த டாடா மோட்டார்ஸ், இப்போது 3ம் இடத்தையும் மஹிந்திரா அண்ட் மஹிந்திராவிடம் பறிகொடுத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. 1லட்சம் ரூபாய்க்கு நானோ காரை அறிமுகப்படுத்தியதில் இருந்து இப்போது வரைக்கும் ஏகப்பட்ட புதுகார்களை உருவாக்கி வருகிறது. இருந்தும் அந்நிறுவனத்தின் கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் அந்நிறுவனத்தின் கார் விற்பனை சரிந்து இருக்கிறது.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 60,405 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால் இதே காலத்தில் மஹிந்திரா நிறுவனம் 61,504 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் கடந்த பல ஆண்டுகளாக விற்பனையில் 3ம் இடம் வகித்து வந்த டாடா மோட்டார்ஸ் இப்போது 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் 4ம் இடத்தில் இருந்த மஹிந்திரா இப்போது 3ம் இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்த எக்ஸ்யூவி 500 மாடல் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எக்ஸ்யூவி வந்தபின் மஹிந்திராவின் கார் விற்பனை பன்மடங்காக உயர்ந்தது.
முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹூண்டாய் நிறுவனத்திடம் தனது 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|