பதிவு செய்த நாள்
20 ஜூலை2012
14:39
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம், இந்தியாவில் ஃபியஸ்டா மாடல் காரை விற்பனை செய்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கிறது. பெட்ரோல் காரில், 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், டீஸல் காரில், 1.4 லிட்டர் டர்போ டீஸல் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ஃபியஸ்டா காரின் டாப் எணடு மாடல் காராக, எஸ்எக்ஸ்ஐ வேரியன்ட் தான் உள்ளது. இந்த சூழ்நிலையில், ஃபியஸ்டா காரின் புது வேரியன்ட்டாக, ஃபியஸ்டா டைட்டானியம் என்ற காரை, ஃபோர்டு கார் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் உதிரி பாகங்கள், ஃபோர்டு காரின் ஃபிகோ காரை போல உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள ஃபியஸ்டா காரை விட, புது வேரியன்ட் காரின் விலை ரூ.50,000 குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிகோ காரில் உள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களும், இந்த புதிய காரில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தககது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|