தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... நடப்பாண்டு  ஜூன் மாதத்தில்... விமான பயணிகள் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவு நடப்பாண்டு ஜூன் மாதத்தில்... விமான பயணிகள் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
2 லட்சம் கார்கள் உற்பத்தி வோக்ஸ்வாகன் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2012
16:11

ஜெர்மனி நாட்டை சேர்ந்த வோக்ஸ்வாகன் கார் நிறுவனம், இந்தியாவில் கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்பட துவங்கியது. மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகே, சாகன் என்ற இடத்தில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இங்கு துவக்கத்தில் போலோ கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர், வென்டோ ஃபாபியா மற்றும் ரேபிட் ஆகிய மாடல் கார்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி துவங்கிய மூன்று ஆண்டுகளில், 2 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற சாதனையை, வோக்ஸ்வாகன் நிறுவனம் சமீபத்தில் நிகழ்த்தியுள்ளது.

பல வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் நிஸான் நிறுவனம், இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவது, உள்நாட்டில் கார் விற்பனையில் தொய்வு போன்ற காரணங்களால், மாருதி சுசூகி நிறுவனம் போன்ற பல கார் நிறுவனங்கள், நிஸான் பாணியை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மாருதி சுசூகி நிறுவனம், ஆசிய மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கு, கார்களை ஏற்றுமதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில், வோக்ஸ்வாகன் நிறுவனமும், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. இதற்கு அச்சாரமாக, சாகன் தொழிற்சாலையில், லெப்ட் ஹாண்டு டிரைவ் வசதி கொண்ட வென்டோ கார் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற சாதனையுடன், இந்த புதிய முயற்சியையும் வோக்ஸ்வாகன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)