தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... தங்கம் விலையில் மாற்றமில்லை   தங்கம் விலையில் மாற்றமில்லை ...
நடப்பாண்டு ஜூன் மாதத்தில்... விமான பயணிகள் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
00:40

புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், உள்நாட்டிற்குள் விமானப் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவடைந்து, 51.08 லட்சமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த எண்ணிக்கை 53.12 லட்சமாக இருந்தது என, உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை :மே மாதத்திலும், உள்நாட்டிற்குள் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 0.9 சதவீதம் குறைந்திருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, மே மற்றும் ஜூன் மாதங்களில் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.பொருளாதார மந்தநிலை மற்றும் விமானக் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த இரண்டு மாதங்களாக, விமானங்களில் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேசமயம், நடப்பு 2012 ஆண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், உள்நாட்டில், விமானப் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 3.71 சதவீதம் வளர்ச்சி கண்டு, 309.16 லட்சமாக அதிகரித்துள்ளது.
பயண கட்டணம்:டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில், விமான நிலையங்களில், விமானங்களை நிறுத்துவதற்கான கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த செலவினத்தை, விமானச் சேவை நிறுவனங்கள், பயணக் கட்டணத்தில் இணைத்ததையடுத்து, விமான போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளது.எனவே,பலர் விமானங்களில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.இதன் காரணமாகவும்,கடந்த ஜூன் மாதத்தில்,விமானப் பயணம் மேற்கொள்வது மிகவும் சரிவடைந்துள்ளதாக, விமானப் பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2008ம் ஆண்டில், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் மந்தமடைந்தது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், பல்வேறு வரிச் சலுகைகளை அளித்தது. இது, தற்போது, படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருவதால், விமானக் கட்டணம் மிகவும் உயர்ந்துள்ளது. இதுவும், இத்துறையை பாதித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம்:கடந்த ஒரு சில ஆண்டுகளாக, இந்தியாவில் விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.குறிப்பாக, உள்நாட்டில், இண்டிகோ நிறுவனம் தவிர, பல நிறு வனங்கள் தொடர்ந்து இழப்பை கண்டு வருகின்றன.பெரிய விமானச் சேவை நிறுவனங்கள் மட்டுமின்றி, குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களும், குறைந்த அளவிற்கே பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இந்நிறுவனங்களின் வருவாய் மிகவும் குறைந்து போயுள்ளது.
பங்களிப்பு:சென்ற ஜூன் மாதத்தில், அதிகளவில் பயணிகளை கையாண்ட வகையில், ஒட்டு மொத்த அளவில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் நிறுவனங்கள் 27.4 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளன. இதை யடுத்து, டில்லியைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான, இண்டிகோ 26 சதவீத பங்களிப் புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம்(உள்நாட்டு சேவை) 16.8 சதவீத பங்களிப்புடன் மூன் றாம் இடத்தில் உள்ளது. கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 4.2 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
வளர்ச்சி:கடந்த ஓராண்டில், உள்நாட்டு விமானச் சேவை கட்டணம் 50 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, முன்பு, 4,000-4,500 ரூபாய் என்றளவில் இருந்த விமானக் கட்டணம், தற்போது, 7,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. கட்டண உயர்வால், விமானப் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்துள் ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி 7-8 சதவீதம் என்றளவில் தான் இருக்குமென இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)