பதிவு செய்த நாள்
21 ஜூலை2012
10:44
ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சூபிஷி கார் நிறுவனம், இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மற்றும் மேற்கு வங்கத்தில், உத்தர்பாரா ஆகிய இடங்களில், இந்த நிறுவனத்துக்கான தொழிற்சாலைகள் உள்ளன. உத்தர்பாரா தொழிற்சாலையில் தான், அம்பாஸிடர் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. திருவள்ளூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சீடியா கார், பல ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விற்பனையில் தொய்வு ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன் காரின் விலை குறைக்கப்பட்டு, ரூ.7.99 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது "சீடியா செலக்ட்' என்ற புதிய வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த கார் பெட்ரோலில் ஓடக்கூடியது. இதன் விலை ரூ.8.9 லட்சம்( எக்ஸ்ஷோரூம், டில்லி). ஏற்கனவே விற்பனையில் உள்ள சீடியா காரை விட புது வேரியன்ட் காரின் விலை ரூ.90,000 அதிகம். புதிய காரில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, இன்டர்நெட், வீடியோ, ஜி.பி.எஸ்., என பல அம்சங்கள் கொண்ட, "டேப்லெட்' கையடக்க கம்யூட்டர் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு மேப்மை இந்தியா 3ஜி ஆன்டிராய்டு டேப்லெட் என்று பெயரிடப்பட்டுள்ளது. காரில் டிரைவர் சீட்டுக்கு முன்பாகவோ அல்லது முன்பக்க இருக்கையின் பின்புறத்திலோ இந்த கையடக்க கம்ப்யூட்டரை பொருத்தி கொள்ளலாம். இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|