தங்கம் விலையில் மாற்றமில்லை   தங்கம் விலையில் மாற்றமில்லை ... அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,785 கோடி குறைவு அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,785 கோடி குறைவு ...
ரூ.5999 விலையில் புதிய டேப்லெட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
16:26

புதுடில்லியை சேர்ந்த கோ டெக் நிறுவனம் ஃபன்டேப் ஃபிட் என்ற புதிய டேப்லட்டை வெளியிட்டுள்ளது. இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இந்த திரை தகவல்கள், புகைப்படங்கள் என்று எதையும் தெளிவாக பார்க்க உதவும்.இந்த டேப்லட் பிசி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபன்டேப் ஃபிட் டேப்லட் குறைந்த விலையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், அனைவரும் எதிர்பார்க்கும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும். விலையும் குறைந்ததாக இருக்க வேண்டும், அதே சமயம் அதற்கு ஏற்ப வகையில் சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் வழங்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இந்த டேப்லட்டின் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட்டில் இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்வென்றால், உடல் நலத்ததினை பாதுகாத்து கொள்ள சில சிறந்த வழிகளை காட்டும் வகையில் பல புதிய அப்ளிக்கேஷன்களையும் டவுன்லோட் செய்யலாம். வீடியோ சாட் வசதிக்காக இதில் 0.3 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இது குறைந்த மெகா பிக்ஸல் கொண்ட கேமரா தான். ஆனால் படங்கள் பார்க்க இந்த டேப்லட்டில் உள்ள 3,600 எம்ஏஎச் பேட்டரி 4 மணி நேரம் உழைக்கும். மியூசிக் ப்ளேபேக் வசதிக்கு இந்த பேட்டரி 8 மணி நேரம் உழைக்கும். கோ டெக் நிறுவனத்தின் இந்த ஃபன்டேப் ஃபிட் என்ற இந்த டேப்லட் சிறப்பாக வைபை வசதிக்கும் சப்போர்ட் செய்யும். 7 இஞ்ச் திரையில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் இந்த ஃபன்டேப் ஃபிட் என்ற இந்த டேப்லட் ரூ. 5,999 பட்ஜெட் விலை கொண்டது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)