பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
15:02
புதுடில்லி: கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் கைவினை பொருட்களின் ஏற்றுமதி 3 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது. உலகளவில் காணப்படும் பொருளாதார சுணக்கம் எல்லா துறைகளிலும் பிரதிபலிக்கிறது. கடந்த மே மாதத்தில் 16.60 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 3 சதவீதம் சரிந்து 16.10 கோடி டாலராக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக கைவினைப் பொருள் ஏற்றுமதி சரிந்துள்ளதாக கைவினைப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 6.5 சதவீதம் வளர்ச்சியடைந்து 59.10 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இப்போதைய சூழல் தொடர்ந்தாலும், நடப்பு நிதி ஆண்டில் கைவினைப் பொருள் ஏற்றுமதி வருமானம் 320 கோடி டாலரை எட்டும் என கவுன்சில் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|