பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
09:59

சென்னை : காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், மீன் விலை, நேற்று கடுமையாக உயர்ந்திருந்தது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு, நேற்று அதிகாலையிலிருந்து, 100 பெரிய படகுகள் மற்றும் 50 சிறிய பைபர் படகுகளில், மீன்கள் பிடித்து வரப்பட்டன. பெரிய படகு உரிமையாளர்கள் நடத்திய ஏல விற்பனையில், காட்டின் கடமான் கிலோ 200 ரூபாய்க்கும், கடமான் ரவுண்டு கூடை 2,000 ரூபாய்க்கும், கடமான் ஊசி (கூடை) 1,800 ரூபாய்க்கும், அதிகபட்சமாக விற்கப்பட்டன. ஏறியது விலை சங்கரா மீன் கூடை 400 ரூபாய், நவரை மீன் கூடை 250 முதல் 300 ரூபாய், கிளிசை மீன் கூடை 150 ரூபாய், பெரிய சங்கரா மீன் கூடை 1,500 ரூபாய், வவ்வால் மீன் கூடை 3,000 ரூபாய் (சிறிய கூடை அளவு), மாவலாசி கிலோ 300 ரூபாய், வஞ்சிரம் கிலோ 150 வரை, ஏலத்தில் விற்கப்பட்டன. சில்லரை விற்பனையில், நேற்று முன்தினம், மாவலாசி கிலோ 350, வஞ்சிரம் கிலோ 250 ரூபாய், பெரிய சங்கரா கிலோ 150 ரூபாய், சிறிய சங்கரா 100 ரூபாய், ஆரா கிலோ 200 ரூபாய், பாறை கிலோ 200 ரூபாய், கிளிசை கிலோ 50 ரூபாய், நெத்திலி கிலோ 100 ரூபாய், பொச்சிபாறை கிலோ 150 ரூபாய், வவ்வால் கிலோ 150 ரூபாய், வாளமீன் கிலோ 125 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டன. இந்த மீன்கள் விலை, நேற்று இரண்டு மடங்காக உயர்ந்திருந்தது. மீன் வியாபாரி சித்திரை கூறுகையில், "கடந்த வாரம், புதன் கிழமை அமாவாசை. ஒருநாள் இடைவெளியில், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தொடர்ச்சியாக வந்தது. இதனால், அசைவப் பிரியர்கள் மீன் வாங்குவதை தவிர்த்தனர். இந்த நாட்களில், மீன் கள் வரத்து இருந்தாலும், உள்ளூரில் விற்பனை அதிகம் இல்லை. இதனால், விலை குறைவாகவே இருந்தது. ஆனால், நேற்று, மீன் வரத்து சராசரியாக இருந்தது. தேவை அதிகரித்ததால், விலை மிக அதிகமாக இருந்தது,'' என்றார். கூட்டம் அதிகரிப்பு நேற்று, ஆடி முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால், சென்னைவாசிகள் அம்மனை வழிபட்டு, வீடுகளில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், மீன் உணவு முக்கியமாக இடம் பெற்றிருந்தது. இதற்காக, வழக்கத்தை விட, அதிகமாக மீன் தேவை ஏற்பட்டது. இதனால், மீன் விலை உயர்ந்தது. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், சில்லரை விலையில் மீன் வாங்க வந்தவர்கள் கூட்டம், அதிகமாக காணப்பட்டது.
சில்லரை விலை விவரம் (ரூபாயில்)
மீன் வகை சனி ஞாயிறு
வஞ்சிரம் நடுத்தரம் 250 500
பாறை 200 450
ஆரா 200 400
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|