பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:10

(எல் அண்டு டி) நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 864 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, (746 கோடி ரூபாய்) 16சதவீதம் அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர வருவாய், 26 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,482 கோடியிலிருந்து, 11,956 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், பொறியியல் மற்றும் கட்டுமானப் பிரிவின் பங்களிப்பு ரூ.10,441 கோடியாகவும், மின் மற்றும் மின்னணு பிரிவின் பங்களிப்பு,ரூ. 723 கோடியாகவும், இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலை பொருட்கள் தயாரிப்பு பிரிவின் வருவாய் ரூ.556 கோடியாகவும் உள்ளது. எஞ்சியுள்ள தொகை, இதர பிரிவிலிருந்து கிடைக்கப்பெற்ற வருவாயாக உள்ளது.
சென்ற ஜூன் 30ம் தேதி வரையிலான நிலவரப்படி, நிறுவனத்திடம், 1,53,095 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் உள்ளன. இதில், ஏப்.,- ஜூன் வரை
யிலான முதல் காலாண்டில் மட்டும், ரூ.19,594 கோடிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.
டாக்டர் ரெட்டீஸ்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|