பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:11

சென்னை: இந்தியன் வங்கி, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் 462 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, (406 கோடி ரூபாய்) 13.51 சதவீதம் அதிகமாகும் என, இவ்வங்கியின் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் தெரிவித்தார்.சென்ற ஜூன் வரையிலுமாக, வங்கியின் மொத்த வர்த்தகம் 14.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2, 20, 888 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 1,92,934 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், வங்கி திரட்டிய டெபாசிட் 1, 27, 012 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட (1, 10, 425 கோடி ரூபாய்)15 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில், வங்கி வழங்கிய கடன்கள் 13.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 82, 510 கோடியிலிருந்து, 93, 876 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கியின் மொத்த வருவாய் 566 கோடி அதிகரித்து, 3, 597 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய் 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1, 153 கோடி ரூபாயை எட்டியுள்ளது.சென்ற மார்ச் மாத நிலவரப்படி, வங்கியின் மொத்த வசூலாகாத கடன் 2.03 சதவீதத்திலிருந்து, 1.66 சதவீதமாக சரிவடைந்து, 256 கோடியிலிருந்து, 152 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே போன்று, நிகர வசூலாகாத கடன் 1.33 சதவீதத்திலிருந்து, 1.04 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இவ்வாறு பாசின் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|