பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:13

புதுடில்லி: நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் கனிமங்கள் உற்பத்தி மதிப்பு, 17,863 கோடி ரூபாயாகஅதிகரித்துள்ளது என, மத்திய கனிம வள அமைச்சகம் வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மொத்த கனிமங்கள் உற்பத்தியில், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, பழுப்பு நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகிய ஆறு கனிமங்களின் பங்களிப்பு, 95 சதவீதம் என்றளவில் உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, 5,862 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த கனிமங்களின் உற்பத்தி மதிப்பில், இதன் பங்களிப்பு, 33 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது.இதையடுத்து, நிலக்கரி (5,159 கோடி ரூபாய்), இரும்புத்தாது (3,829 கோடி ரூபாய்), இயற்கை எரிவாயு (1,353 கோடி ரூபாய்), பழுப்பு நிலக்கரி (450 கோடி ரூபாய்), சுண்ணாம்புக்கல் (334 கோடி ரூபாய்) ஆகிய கனிமங்கள் உள்ளன.சென்ற மே மாதத்தில், நிலக்கரி உற்பத்தி, 4 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பழுப்பு நிலக்கரி (40 லட்சம் டன்), இயற்கை எரிவாயு (361 கோடி கன மீட்டர்), கச்சா எண்ணெய் (32 லட்சம் டன்), பாக்சைட் (13.44 லட்சம் டன்), குரோமைட் (3.87 லட்சம் டன்), தாமிரம் (9,000 டன்), தங்கம் (144 கிலோ), இரும்புத்தாது (1.58 கோடி டன்), சுண்ணாம்புக்கல் (2.38 கோடி டன்), வைரம் (2,340 காரட்) ஆகியவை உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|