பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:16

புதுடில்லி: வரும் 2017ம் ஆண்டில், இந்தியாவில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் கல்விகற்பித்தலுக்கான சந்தை மதிப்பு, 4,000 கோடிடாலராக (2.20 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்றுதெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், இந்தியாவில் மிகவும் அதிகபட்சமாக, 10 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிக்கூடங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், 120 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியாவில், பாதிக்கும் மேற்பட்டோர் கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.மத்திய, மாநில அரசுகள், அனைத்து மக்களுக்கும் கல்வி கற்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கல்வி வளர்ச்சியில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.பல தனியார் நிறுவனங்கள், மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே, இணையதளம் வழியாக கல்வியை வழங்கி வருகின்றன. இதன் விளைவாக, கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது, இந்தியாவின் இணையதள கல்வி சந்தையின் மதிப்பு, 2,000 கோடி டாலராக (11,000 கோடி ரூபாய்) உள்ளது. இது, வரும் 2017ம் ஆண்டில், 4,000 கோடி டாலராக (2.20 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, ஆய்வுநிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|