பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:17

புதுடில்லி கடந்த ஏழு ஆண்டுகளில், உள்நாட்டில் சில்லரை மருந்து விற்பனை சந்தை, இரண்டு மடங்கு உயர்ந்து, 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் மருந்துகள், சர்வதேச தரத்திற்கேற்ப உற்பத்தி செய்யப்படுவதால், பல நாடுகள் இம்மருந்துகளை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கின்றன. அதேபோல், இந்தியாவும் மருந்து மற்றும் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் மருந்து இறக்குமதி, 11,113 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 9,960 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. கடந்த 2004-05ம் நிதியாண்டில், நாட்டின் மருந்து பொருட்கள் இறக்குமதி, 3,169 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது.இந்தியாவின் மொத்த மருந்து பொருட்கள் இறக்குமதியில், சீனா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீதமாக உள்ளது. இதில், சீனாவின் பங்களிப்பு, 39 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மீதமுள்ள பங்களிப்பை, அமெரிக்கா, சுவிட்சர்லாந்துநாடுகள் கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|